22 வயது இளம் பாடகர் திடீர் மரணம் ; ரசிகர்கள் அதிர்ச்சி!

Delhi
By Swetha Subash Jun 03, 2022 06:26 AM GMT
Report

டெல்லியை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஷுல் சாகர் உயிரிழந்துவிட்டதாக அவரது நண்பர் ஒருவர் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த 22 வயதான இளம் இசையமைப்பாளரும் பாடகருமான ஷீல் சாகர் நேற்று முந்தினம் உயிரிழந்து விட்டதாக அவரது நண்பர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இண்டிபென்டண்ட் ஆர்டிஸ்டான ஷீல் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இண்டிபென்டண்ட் இசை விழாவில் ‘இஃப் ஐ ட்ரைட்’(If I tried) என்ற பாடலை பாடியதன் மூலம் பிரபலமானார்.

இந்த பாடல் ஸ்பாடிஃபை ஆப்-இல் மட்டும் 40,000 முறை கேட்கப்படுள்ளது. இந்த பாடலை தொடர்ந்து ‘பிஃபோர் இட் கோஸ்’, ‘ஸ்டில்’, ‘Mr. மொபைல் மேன்’ போன்ற பாடல்களையும் ஷீல் வெளியிட்டார்.

22 வயது இளம் பாடகர் திடீர் மரணம் ; ரசிகர்கள் அதிர்ச்சி! | Delhi Based Musician Sheil Sagar Passed Away

இதைத்தவிர ப்யானோ, கிட்டார் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதிலும் ஷீல் கைத்தேர்ந்தவர் ஆவார். ஷீல்-இன் எதிர்பாராத மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பிரபல பாடகரான கேகே உயிரிழந்த நிலையில் தற்போது வளர்ந்து வந்த இளம் பாடகரும் இசையமைப்பாளருமான ஷீல் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஷீலின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.