ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு - டெல்லி அரசு அறிவிப்பு
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடர்ந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் தான் கொரோனா பாதிப்புகள் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கின.
மே மாதத்தின் தொடக்கத்தில் தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தைக் கடந்தது. இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் பல் நோயாளிகள் மருத்துவமனை வாசல்களிலே உயிர்விட்ட துயர சம்பவங்களும் அரங்கேறின.
இந்த நிலையில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு பெருமளவு கட்டுக்குள் வந்துள்ளது. ஆக்சிஜன் வசதிகள் நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பல மாநிலங்கள் கொரோனாவால் இறந்தவர்கள் மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் டெல்லி அரசு ஏற்கனவே கொரோனாவால் இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் ரூ.55,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
தற்போது ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரழந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கான கோரிக்கைகளை பரிசீலித்து அரசாங்கம் நியமித்த 6 நபர் நிபுணர் குழு பரிந்துரை அளிக்கும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.