விரைவில் டெல்லியில் அண்ணா அறிவாலயம் திறப்பு - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் செய்கிறார்.
டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவின் கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது.
மத்திய அரசு உறுதி அளித்த நிலையில், திமுகவின் அலுவலகம் டெல்லியில் கட்டப்பட்டு வந்தது.
டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருகில் திமுக அலுவலக கட்டுமான பணிகள் நடந்தது வந்தன.
தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, வரும் ஏப்ரல் 2ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இதற்காக 3-வது முறையாக டெல்லிக்கு செல்ல உள்ளார்.