இதெல்லாம் என்னத்த பாகுபலி இயக்குனரை வேதனைப்பட வைத்த டெல்லி ஏர்போர்ட்! நடந்தது என்ன?

ssrajamouli delhiairport
By Irumporai Jul 02, 2021 02:35 PM GMT
Report

பிரபாஸ் - ராணா நடிப்பில் வெளிவந்து உலகளவில் அமோக வரவேற்பை பெற்று, மாபெரும் சூப்பர் ஹிட்டான பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி.

இத்திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலக அளவில் பிரபலமானவர் ராஜமவுலி. 

தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வரும்நிலையில் ராஜமவுலி தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விமான நிலையத்தின் நிலை குறித்து மிகவும் வேதனையுடன் பதிவிட்ட பதிவு ஒன்று பேசு பொருளாகியுள்ளது

அதில் அவர், நான் நள்ளிரவு 1 மணிக்கு லுஃப்தான்ஸா விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தேன்.

அப்போது அங்கு கொரோனா பரிசோதனைக்கான படிவங்கள் வழங்கப்பட்டது. அதனை பூர்த்தி செய்ய பயணிகளுக்கு இடம் இல்லாத காரணத்தால்தரையில் அமர்ந்து கொண்டும், சுவற்றில் மேல் வைத்தும் படிவங்களைபூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வு பார்ப்பதற்கு நன்றாக இல்லை. குறைந்தபட்சம் மேஜைகள் வழங்குவது என்பது ஒரு சாதாரண சேவைதான் என குறிப்பிட்டுள்ள ராஜமவுலி.

மேலும் ஏராளமான தெரு நாய்கள்  விமான நிலைய வாயிலுக்கு அருகே நின்றுகொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தேன்.

கண்டிப்பாக இது  இந்தியா வரும் வெளிநாட்டவர்களுக்கு நல்லவிதமான எண்ணத்தை உருவாக்காது. தயவுசெய்து இதைக் கவனத்தில் கொள்ளவும் நன்றி என்று பதிவு செய்துள்ளார். தற்போது ராஜ மவுளியின் ட்விடர் பதிவு  வைரலாகி வருகிறது.