தீபாவளி நாளன்று காற்று மாசு அதிகளவில் பாதிக்கப்படும் - மாசு கட்டுப்பாட்டு வாாியம் எச்சரிக்கை
நாளை தீபாவளி பண்டிகை நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லியின் முக்கிய நகரங்களான பரிதாபாத்,காசியாபாத்,நொய்டா உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியானது.6 விழுக்காடு குப்பைகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்படுவதாக காற்று தர முன்னறிவிப்பு நிறுவனம் சபர் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அக்டோபரில் பெய்த கனமழையால் காற்று மாசுபடுதல் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் தலை துாக்க ஆரம்பித்துள்ளது.
மேலும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் காற்றின் தரம் மேலும் 40 சதவீதம் வரை பாதிப்படைய கூடும் என சபர் கணித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.