12 கி.மீ. காரில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு - வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..!

Viral Video Delhi Accident
By Nandhini Jan 02, 2023 01:13 PM GMT
Report

டெல்லியில் 12 கி.மீ. காரில் இழுத்துச்செல்லப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரில் இழுத்துச்செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு

நேற்று டெல்லியில் ஸ்கூட்டில் சென்ற இளம் பெண் மீது கார் மோதியது. ஆனால், விபத்து நடந்தவுடன் கார் ஓடியவர் காரை நிற்காமல் ஓடிச்சென்றுள்ளார். காருக்கு அடியில் சிக்கிய பெண் சுமார் 12 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சுமார் 4 கிலோமீட்டர் தூரம் காருடன் பெண் இழுத்துச் செல்லப்பட்டார். 

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மிட்டு மற்றும் மனோஜ் மிட்டல் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.

பெண் இறந்ததைக் கண்டித்து சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு வெளியே மக்கள் திரண்டு இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.