காரில் 12 கி.மீ. இழுத்துச் செல்லப்பட்டு இறந்த பெண்ணின் மூளை காணவில்லை - வெளியான திடுக்கிடும் தகவல்...!

Delhi Accident
By Nandhini Jan 04, 2023 09:37 AM GMT
Report

விபத்தில் 12 கி.மீ இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் மூளை காணவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்தில் உயிரிழந்த டெல்லி பெண்

டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்கூட்டியில் கார் மோதியதில் 20 வயதுப் பெண்ணின் உடல் 12 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில், விபத்து ஏற்படுத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அப்பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

delhi-accident-car-woman-body-dragged-12-kilometre

பிரேத பரிசோதனை அறிக்கை திடுக் தகவல்

இந்நிலையில், வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில், 

ஏற்கெனவே, விபத்தில் உயிரிழந்து பெண்ணின் உடலில் பாலியல் வன்கொடுமைக்கான காயம் எதுவும் இல்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மூளைப் பொருள் காணவில்லை. அவளது முதுகெலும்பு முறிந்தது.

மார்பின் பின்பகுதியிலிருந்து அவளது விலா எலும்புகள் வெளிப்பட்டன. 2 நுரையீரல்களும் வலது நுரையீரலின் வெளிப்பாட்டுடன் திறக்கப்படுகின்றன. வயிற்றில் அரை செரிமான உணவு பொருள் இருந்தது.

அப்பெண்ணின் அந்தரங்க பகுதிகளில் காயம் எதுவும் இல்லை. வயிற்றில் மதுவின் தடயங்கள் இல்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.