காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண் - விபத்துக்கு முன் நண்பனுடன் சண்டை... - சிசிடிவி வைரல்...!

Viral Video Delhi Accident
By Nandhini Jan 03, 2023 12:31 PM GMT
Report

விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிரிழந்த அஞ்சலிக்கும், அவரது நண்பருக்கும் சண்டை சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த டெல்லி பெண்

டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்கூட்டியில் கார் மோதியதில் 20 வயதுப் பெண்ணின் உடல் பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்த விவகாரத்தில், பாலியல் வன்கொடுமை இல்லை என்று டெல்லி காவல்துறை மறுத்துள்ளது.

அப்பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. பிரேத பரிசோதனையில் "பாலியல் வன்கொடுமைக்கான காயம் எதுவும் இல்லை" என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

delhi-accident-car-woman-body-dragged-12-kilometre

வைரலாகும் சிசிடிவி வீடியோ

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 20 வயதான அஞ்சலி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1:45 மணிக்கு தனது தோழியுடன் விருந்து முடிந்து ஓட்டலிலிருந்து வெளியேறினார்.

அப்போது, அஞ்சலிக்கும், நண்பர் நிதி என்பவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பிறகு, தன் தோழியுடன் ஸ்கூட்டியில் புறப்பட்டார்.

இதனையடுத்து, விபத்திற்குப் பிறகு கூட வந்த தோழி சிறு காயங்களுடன் தப்பி ஓடிவிட்டார். தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.