எம்.எல்.ஏ சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல் - அதிர்ச்சியில் ஆம் ஆத்மி... - வைரலாகும் வீடியோ

Viral Video Delhi
By Nandhini Nov 22, 2022 12:48 PM GMT
Report

டெல்லியில் எம்.எல்.ஏவை ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏவை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டெல்லி, 'மத்தியாலா' தொகுதி எம்.எல்.ஏ 'குலாப் சிங் யாதவ்' மீது பயங்கர தாக்குதல் நடத்தப்படுகிறது.

யாதவ் நேற்று இரவு 8 மணியளவில் ஷியாம் விஹாரில் கட்சித் தொண்டர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார். அப்போது, திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. இந்த சலசலப்பு கடும் வாக்குவாதம் நடக்கிறது.

இந்த வாக்குவாதம் பின்னர் கை கலப்பாக மாறுகிறது. இதனையடுத்து, பலர் எம்எல்ஏவை கடுமையாக தாக்குகிறார்கள். அவரது சட்டை காலரை பிடித்து இழுத்துக்கொண்டு தரதரவென்று இழுத்துச் செல்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர் உயிருக்கு பயந்து ஓடத்தொடங்குகிறார். ஆனாலும், விடாமல் துரத்தி சென்று தாக்குதல் நடத்துகின்றனர்.        

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

delhi-aap-mla-gulab-singh-yadav-people-attacked