Thursday, May 8, 2025

திடீரென இடிந்து விழுந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம்... - பதற வைக்கும் வீடியோ வைரல்...!

Viral Video Delhi Accident
By Nandhini 2 years ago
Report

டெல்லியில் திடீரென 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இடிந்து விழுந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், டெல்லி சாஸ்திரி நகரில் ஒரு சில நொடிகளில், 4 மாடி கட்டிடம் ஒன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.

நல்லவேளையாக கட்டிடத்தில் யாரும் வசிக்காததால், இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை யாருக்கும் ஏற்படவில்லை. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.     

delhi-4-storey-building-collapsed-viral-video