சிக்கலில் சன் டிவி ... நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ், முக்கிய சீரியலால் வெடித்த பிரச்சனை

Sun TV
By Irumporai May 01, 2022 11:32 AM GMT
Report

சன் டிவி தான் தற்போது தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களில் அதிக டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் சன் டிவி இரண்டாம் இடத்தில் இருக்கும் விஜய் டிவியை விட நல்ல ரேட்டிங் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன் டிவியில் ஒளிப்பரப்பான தெய்வமகள் தொடரின் கதையினை அனுமதி இல்லாமல் பெங்காலி மொழியில் ரீமேக் செய்து ஒளிபரப்பியதற்காக ரூ 100 கோடி ரூபாய் கேட்டு விகடன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

சிக்கலில் சன் டிவி ...  நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ், முக்கிய சீரியலால் வெடித்த பிரச்சனை | Deiva Magal Serial Vikatan Legal Notice To Sun Tv

 அதே கதையை வைத்து கதாபாத்திரங்களின் பெயரை மட்டும் மாற்றி Debi என்கிற பெயரில் ரிமேக் செய்து சன் பங்ளா தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்கின்றனர் என குற்றம்சாட்டினை முன் வைத்துள்ளது விகடன் .

இந்த நிலையில் இது குறித்து 15 நாட்களுக்குல் விளக்கம் அளிக்க வேண்டும், அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விகடன் நிறுவனம் சார்பில் அனுப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது.