மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் 3வது அலை இந்தியாவில் தீவிரமாக வீசி வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது அலையில் தப்பித்துக் கொண்டவர்கள் பலர், 3வது அலையில் சிக்கியுள்ளார்கள்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளுமாறு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் இருந்து வரும் நிலையில், தொற்று ஏற்பட்டாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு எனக்கு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.