மின்சாரம் தாக்கி மிளா மான் உயிரிழந்த சோகம் - வனத்துறையினர் விசாரணை
மின்சாரம் தாக்கி மிளா மான் உயிரிழந்ததை அடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில் மழையினால் மரம் சாய்ந்து விழுந்து.
இதில் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மிளா மான் ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் வீசுகின்ற காற்று கூட அனல் காற்றாக வீசியது. இந்நிலையில் மாலை திடீரென சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மட்டுமன்றி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவார பகுதியான செண்பகத்தோப்பு பகுதியிலும் இந்த மழை பெய்தது அப்போது சில இடங்களில் பலத்த காற்றும் வீசியது.
இந்த காற்றினால் செண்பகதோப்பு பகுதியில் மரம் ஒன்று சாய்ந்து அருகில் உள்ள மின்சார வயர் மீது விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் மின்சார வயர் தரையில் கிடந்ததால் அந்த வழியாக வந்த மிளா மான் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்து இறந்து கிடந்த மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.