தனது பதவியை ராஜினாமா செய்தார் தீபிகா படுகோனே

post deepikapadukone boollywood flimfuction
By Praveen Apr 14, 2021 03:32 PM GMT
Report

 திரைப்படவிழா தலைவர் பதவியை தீபிகா படுகோனே ராஜினாமா செய்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்தின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்தி பட உலகை கதி கலங்க வைத்த போதை பொருள் வழக்கில் தீபிகா படுகோனேவுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தீபிகா படுகோனே கடந்த 2019-ம் ஆண்டு எம்.ஏ.எம்.ஐ. மும்பை திரைப்பட விழா தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு முன்பு அமீர்கானின் மனைவி கிரண் ராவ் இந்த பதவியில் இருந்தார். இந்த நிலையில் மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை தீபிகா படுகோனே திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எம்.ஏ.எம்.ஐ. மும்பை திரைப்பட விழா தலைவராக இருந்து சினிமாவையும், உலகம் முழுவதும் உள்ள சாதனையாளர்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றிய அனுபவம் மகிழ்ச்சியானது. ஆனால் தற்போது எனது இதர பணிகள் காரணமாக திரைப்பட விழா தலைவர் பதவிக்கு அர்ப்பணிப்பை கொடுக்க இயலவில்லை. எனவே இந்த பதவியில் இருந்து விலகுகிறேன்'' என்று கூறியுள்ளார்.