வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்க இருந்ததே அந்த நடிகைதான் - போட்டுடைத்த கெளதம் மேனன்
வாரணம் ஆயிரம் படம் குறித்து கெளதம் மேனன் சில தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
வாரணம் ஆயிரம்
தமிழில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வாரணம் ஆயிரம்’. நடிகர் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன் நடித்த இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், ராணுவ வீரர் என மூன்று விதமான கதைக்களம் அமைந்திருக்கும். காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என ரம்மியமாக பிரித்து காட்டியிருப்பார். இன்றளவும் 90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் பட லிஸ்ட்டில் கண்டிப்பாக வாரணம் ஆயிரம் இடம்பிடித்திருக்கும்.
தீபிகா படுகோனே
இந்நிலையில் இந்தப் படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள கெளதம் மேனன், படத்தில் சூர்யாவின் தந்தை வேடத்தில் நடிக்க, மோகன் லால், நானே பட்டேகர் இவர்களில் ஒருவரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருந்தது.
அப்போது நடிகர் சூர்யா தந்தை கதாபாத்திரத்தை தானே நடிப்பதாக கூறி என்னை ஒப்புகொள்ள வைத்தார். அதே போல் அந்த கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக செய்தார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மேக்னா கதாபாத்திரத்தில் சமீரா ரெட்டி நடித்திருப்பார்.
ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனேவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால், அப்போது அவர் ‘ஓம் ஷாந்தி ஓம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளார்.