உலகின் மிக அழகான 10 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார் நடிகை தீபிகா படுகோன்...! குவியும் வாழ்த்துக்கள்

Deepika Padukone
By Nandhini Oct 16, 2022 11:09 AM GMT
Report

உலகின் மிக அழகான 10 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய பெண் நடிகை தீபிகா படுகோன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

நடிகை தீபிகா படுகோன்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் திரையுலகில் பிசியாக வலம் வருகிறார்.

சமீபத்தில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதி, மும்பையில் ரூ. 22 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கினர்.

தற்போது மும்பையில் உள்ள பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். தற்போது தீபிகா படுகோனே, நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

உலகின் 10 அழகான பெண்களில் இடம்பிடித்த தீபிகா படுகோன்

பெண்களின் முகவெட்டு, கண்கள், புருவங்கள், மூக்கு, உதடுகள், கன்னம், மற்றும் தாடை என ஒவ்வொன்றும் எந்த அளவில் இருக்க வேண்டும் என, பண்டைய கிரேக்கர்களின் சரியான விகிதாச்சாரத்தின் படி கணிக்கப்பட்டதில், உலகில் மிகவும் அழகான 10 பெண்களில் நடிகை தீபிகா படுகோனும் இடம்பிடித்துள்ளார். இந்த முக விகிதாச்சாரத்தையே தமிழர்கள் சாமுத்திரிகா லட்சணம் என கூறுவது உண்டு.

உலகின் 10 அழகான பெண்களின் பட்டியல்

இந்நிலையில், தற்போது உலகின் 10 அழகான பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது-

1ல் இடத்தில் - Jodie Comer (29).

2-வது இடத்தில் ஸ்பைடர்மேன், டாம் ஹாலண்டின் காதலி - Zendaya (26).

3-வது இடத்தில் மாடல் - Bella Hadid (25).

4-வது இடத்தில் பாடகி - Beyonce (41).

5-வது இடத்தில் - Ariana Grande

6-வது இடத்தில் - Taylor Swift

7-வது இடத்தில் - Jourdan Dunn

8-வது இடத்தில் - பிரபல ஹாலிவுட் மாடல், தொழிலதிபர் - கிம் கர்தாஷினி

9 -வது இடத்தில் - பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்

10-வது இடத்தில் - HoYeon Jung

இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியர் தீபிகா படுகோன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது புருவம் தான் இவரின் மிகப்பெரிய பிளஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.