கைகோர்க்க மறுத்த தீபிகா .. கோபப்பட்ட ரன்வீர் : ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே விவாகரத்தா ?

Deepika Padukone Ranveer Singh
By Irumporai Mar 25, 2023 05:30 AM GMT
Report

ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே நட்சத்திர தம்பதியார் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரன்வீர்  - தீபிகா

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து கடந்த 2018 ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.ரன்வீர் சிங் இந்தளவுக்கு பிரபலமாக இருந்தாலும் அவரது மனைவி தீபிகா படுகோனே அவரின் புகழை தொடவில்லை என கூறப்பட்டது.

விவாகரத்து முடிவு

இந்த நிலையில். மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கும் தீபிகாவும் கலந்துகொண்டனர். அப்போது இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது தீபிகாவின் கையை பிடிக்க முயன்றார் ரன்வீர் சிங். ஆனால், தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கின் கையை பிடிக்காமல் விட்டுவிட்டார். அதுமட்டும் இல்லாமல் ரன்வீர் சிங்கை முகம் கொடுத்துக் கூட பார்க்கவே இல்லை.

கைகோர்க்க மறுத்த தீபிகா .. கோபப்பட்ட ரன்வீர் : ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே விவாகரத்தா ? | Deepika Padukone Ignores Ranveer Singh

இதனால் கடுப்பான ரன்வீர் சிங் வேகவேகமாக முன்னால் நடந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ டுவீட்டர் உட்பட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இருவருக்கும் இடையே எதோ பிரச்சினை என்றும், விவாகரத்து செய்யப் போகிறார்களா எனவும் கேள்வி எழுந்துள்ளது.

சில மாதங்களாகவே ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் மண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லையென்றும் அதனால் தான் தீபிகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.