காவி கலரில் பிகினி உடையா ? சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோன்..வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
ஷாருக்கான் நடித்துள்ள பதான் படத்தின் பெஷாராம் ரங் பாடல் வெளியாகி தற்போது டிரெண்டாகி வருகின்றது.
பெஷாரம் பாடல்
சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தீபிகா படுகோனின் நடனம் தற்போது பேசப்பட்டு வரிகின்றது. அதே சமயம் பெஷாராம் பாடலில் பிகினி உடைகளில் தீபிகா படுகோன் ஆடியுள்ள கவர்ச்சி நடனம் ரசிகர்களை கவர்ந்தாலும் சில விமரசர்கள் இந்த காட்சிக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.
பாதான் பெஷாரம் பாடலில் காவி நிற பிகினி அணிந்து பிகினி உடையுடன் தீபிகா வந்துள்ளதை இந்து அமைப்புகள் கண்டித்து வருகின்றன .
காவி நிற பிகினி
ஆகவே பாய்காட் பாலிவுட் கேங் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கூறி சமூகவலைத்தளங்களில் கூறி வருவது தற்போது சர்ச்சையினை கிளப்பியுள்ளது.
அதாவது தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடை அணிந்தும் ஷாருக்கான பஞ்சை நிற உடை அணிந்துப்பது பாகிஸ்தானின் நிறத்தை குறிப்பதாகவும் இந்து அமைப்பினர் இணையத்தில் கூறிவருகின்றனர்.
சர்சையில் சிக்கிய தீபிகா
கடந்த சில மாதங்களுக்கு முன்பு லால்சிங் சத்தா படத்திற்கு இதே போன்று எதிர்ப்பு கிளம்பிய நிலையில் படமானது திரையரங்குகளில் வருமானத்தை ஈட்டவில்லை .
தற்போது இதே நிலை தொடர்ந்தால் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள ஷாருக்கானின் பதான் படத்திற்கு நிலவுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நெட்டிசன்கள் விமர்சனம்
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் இந்த பாடல் அமைந்துள்ளது என்றும் பெஷாராம் என பாடல் வரிகள் இடம்பெற்றிருப்பது இந்து மதக் கடவுளை அவமதிக்கும் செயல் என இந்து அமைப்பினை சேர்ந்த நெட்டிசன்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.