மருத்துவமனையில் தீபிகா படுகோனே : அதிர்ச்சியில் ரசிகர்கள்
தீபிகா மன அழுத்தத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
நடிகை தீபிகா படுகோன்
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு சமீபத்தில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீபிகாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பலகட்ட பரிசோதனையின் காரணமாக அவர் அரை நாள் வரை மருத்துவமனையில் இருந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதி
பின்னர் தீபிகா மன அழுத்தத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு பின் தீபிகா இப்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று பதட்டத்தை அதிகரித்துள்ளது.