அப்படியான உறவுகளில் இருந்துள்ளேன் - கணவர் முன்னே ஓப்பனாக கூறிய பிரபல நடிகை!
கடந்து வந்த ரிலேசன்ஷிப் குறித்து நடிகை தீபிகா படுகோன் பேசியுள்ளார்.
தீபிகா படுகோன்
பாலிவுட்டில் பிரபலமாக கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளுள் ஒருவர் தீபிகா படுகோன். ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவரது போட்டோஹூட்டுகள் அனைத்தும் வைரலாவது வழக்கம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவார்.
கமிட்மெண்ட்
தற்போது வரை இருவரும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாத நிலையில் பிரிந்து வாழ்வதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில், பிரபல நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் மற்றும் தீபிகா ஜோடியாக கலந்துக்கொண்டர்.
அப்போது பேசிய தீபிகா, நான் சிங்கிளாக இருக்கவே விரும்பியுள்ளேன். ஏனெனில் 2 சிக்கலான உறவுகளில் இருந்து வெளிவந்துள்ளேன்.
ரன்வீருடனான உறவுக்குப் பின் தான் கமிட்மெண்ட் பற்றி புரிந்தது. யாருடன் பழகினாலும் பேசினாலும், மைண்ட் ரன்வீருடனான உறவைத் தான் நியாபகப்படுத்தும் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது பகிரப்பட்டு வருகிறது.