காலிறுதியில் தவறிய இந்தியாவின் அம்பு: தீபிகா குமாரி ஜோடி தோல்வி..

 ஒலிம்பிக் தொடரின் வில்வித்தை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி தோல்வியை தழுவியது.

இன்று காலை நடந்த வில்வித்தை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி சீன தைபேவின் சியா என்சிலின் - சீ சுன் டாங் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

ஆனால் காலிறுதி போட்டியில் கொரிய ஜோடியுடன் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் மோதியது. இதில் 35-32, 38-37, 35-37, 36-33 என்ற செட்களை பெற்று 6-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்