கிடைத்த கேப்பில் சம்பவம் செய்த தீபிகா குமாரி... அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தல்

Tokyo Olympics 2020 Deepika Kumari Archery competition
By Petchi Avudaiappan Jul 28, 2021 08:31 PM GMT
Report

 டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

மகளிர் வில்வித்தைப் பிரிவில்  நடந்த லீக் சுற்றில் தீபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனிஃபர் முன்சினோ ஃபெர்னாண்டஸ் உடன் மோதினார். முதல் செட்டில் 25 - 26 என்ற கணக்கில் அவர் தோற்க, இரண்டாவது சுற்றை 28 - 25 என்று கைப்பற்றினார்.

3வது சுற்றிலும் தீபிகா 27-25 என்ற கணக்கில் வென்று 4-2 என்ற கணக்கில் அவர் முன்னிலை பெற்றார். ஆனால் 4வது சுற்றில் 24 - 25 என்று ஜெனிஃபர் வென்றார்.

இறுதியாக வெற்றியை தீர்மானிக்கும் 5வது சுற்றில் 26 - 25 என்ற கணக்கில் தீபிகா வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.