நான் எதுவும் சொல்ல விரும்பல...!! வைரலான DeepFake வீடியோ..! நடிகை அபிராமி வேதனை..!

Abhirami Venkatachalam Deepfake Video
By Karthick Jan 30, 2024 06:37 AM GMT
Report

Deepfake வீடியோக்கள் சமூகத்தின் பெரும் பிரச்சனைக்குரிய விவகாரமாகவே மாறிவருகிறது.

Deepfake வீடியோக்கள்

பாலிவுட் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் அருவெறுக்கதக்க deepfake வீடியோ வெளியாகி பெரும் பிரச்சனையாக வெடித்தது. மத்திய அரசு வரை தலையிட்ட இந்த விஷயத்தில் சமீபத்தில் வீடியோவை உருவாக்கிய நபரும் கைதாகினார்.

deepfake-video-of-abhirami-goes-viral

இது பெரும் சர்ச்சையான விஷயமாக வெடித்த நிலையில், பலரும் இதற்கு கண்டங்களும் பல தரப்புகளில் இருந்தும் வந்தது.

அபிராமி வேதனை

இந்நிலையில் தான், தற்போது தமிழ் பட நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான அபிராமி வெங்கடாச்சலம் தனது சமூகவலைத்தளபக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

deepfake-video-of-abhirami-goes-viral

அதில், என் வாழ்க்கையில் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி ஒன்று நடக்ககூடாது. சமீபகாலமாக டீப் ஃபேக் மிகவும் பிரபலமாகி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

இதன்மூலம் யார் வேண்டுமானாலும் நம்மை மோசமாக காட்டலாம் என்பது பயமுறுத்துகிறது. நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இதை உருவாக்கியவன் குற்றவாளி, ஆனால் அதை பகிர்ந்து இன்பம் அனுபவிப்பவன் அதைவிட பெரிய குற்றவாளி.

deepfake-video-of-abhirami-goes-viral

கவலை வேண்டாம் அவர்களுக்கு இந்த பிரபஞ்சம் தக்க பாடத்தை கற்றுக்கொடுக்கும். நான் தைரியமான பெண், எனது வலிமையை யாராலும் தகர்க்க முடியாது. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதை தவிர மற்ற எல்லாவிதமான கீழ்தரமான வேலைகளும் இங்கு நடக்கிறது.

அட்ஜெஸ்ட் பண்ண சொல்லி இன்ஃபக்‌ஷனே ஆகிருச்சு - அவலத்தை பகிர்ந்த அம்மு அபிராமி!

அட்ஜெஸ்ட் பண்ண சொல்லி இன்ஃபக்‌ஷனே ஆகிருச்சு - அவலத்தை பகிர்ந்த அம்மு அபிராமி!

பெண்களின் டீப் ஃபேக் வீடியோவை பார்ப்பதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது என தெரியவில்லை. நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இதுபோன்ற மற்ற பெண்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தற்போது நான் பேசுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

deepfake-video-of-abhirami-goes-viral

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவும் அபிராமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

deepfake-video-of-abhirami-goes-viral

அண்மையில் நடிகை அபிராமியின் deepfake வீடியோவும் வைரலான நிலையில், அது குறித்து நேரடியாக அவரே கருத்து தெரிவித்து தான் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.