முட்டையிடும் வாத்து, மயில் தோகை வெடி.., கோவையில் விற்பனைக்கு வந்த புதிய ரக பட்டாசுகள்

Diwali Coimbatore
By Yashini Nov 02, 2026 09:14 AM GMT
Report

Deepavali new varieties of firecrackers arrive in coimbatore- முட்டை போடும் வாத்து வெடி, ரூபாய் நோட்டு வெடி, மயில் தோகை வெடி உள்ளிட்ட பல்வேறு வகையான புது ரக வெடிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

புதிய ரக பட்டாசுகள்

கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வரும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் ஜவுளி மற்றும் இனிப்புக் கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு கோவை மாநகரில் 1,000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உரிமம் பெற்று திறக்கப்பட்டுள்ளன.

முட்டையிடும் வாத்து, மயில் தோகை வெடி.., கோவையில் விற்பனைக்கு வந்த புதிய ரக பட்டாசுகள் | Deepavali New Varieties Of Firecrackers Arrive  

அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.

சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்காக 50க்கும் மேற்பட்ட வகையான பட்டாசுகளும், இளைஞர்களுக்காக 100க்கும் மேற்பட்ட வகையான பட்டாசுகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

முட்டையிடும் வாத்து, மயில் தோகை வெடி.., கோவையில் விற்பனைக்கு வந்த புதிய ரக பட்டாசுகள் | Deepavali New Varieties Of Firecrackers Arrive  

இதில், பற்ற வைத்தால் முட்டையிடும் வாத்து வடிவிலான வெடி, ஏ.கே.47 துப்பாக்கி போன்ற வடிவில் நெருப்பை வெளியிடும் பட்டாசு, ரூபாய் நோட்டு வடிவிலான வெடி, மயில் தோகை விரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வெடி எனப் பல புதுமையான பட்டாசுகள் இடம்பெற்றுள்ளன.

பட்டாசு கடைகள் அமைப்பதற்கு மாநகர போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பல்வேறு பாதுகாப்பு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்த விதிமுறைகளைப் பின்பற்றி பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.