ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் திருப்பரங்குன்ற தூணில் தீபம் ஏற்றப்பட்டது
deepam lit on thiruparankundram stone lamp: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்ற தூணில் தீபம் ஏற்றப்பட்டது
முன்னதாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அந்த உத்தரவை மீறி, வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலிலே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, கோவில் நிர்வாக அறங்காவலர் குழுவை கலைத்ததோடு, முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழுவை நியமித்தது.
மலை பகுதிக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், முன்னாள் நீதிபதிகள் கண்காணிப்பில் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று CRPF வீரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட திருப்பரங்குன்ற மலையில், தூணில் தீபம் ஏற்றுவதற்கான மேடைகள் அமைக்கப்பட்ட போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தீபம் ஏற்றுவதற்கான பொருட்களை கொண்டு வந்தனர்.
பக்தர்களும் தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், பாதுகாப்பு காரணமாக பக்தர்கள் மலைபகுதியில் அனுமதிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் வைத்தியநாதன் முன்னிலையில், மாலை 5 மணிக்கு தூணில் தீபம் ஏற்றப்பட்டது.
தூணில் தீபம் ஏற்றப்பட்ட மகிழ்ச்சியில், மலையடிவாரத்தில் இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, எந்த பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் தீபம் ஏற்றப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 28, 2026
இது குறித்து திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், "பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு" என தெரிவித்துள்ளார்.