காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் தீபக் சாஹர்? - அதிர்ச்சியில் அணி நிர்வாகம்

deepakchaharinjury cskfansupset iplseries2022
By Swetha Subash Mar 03, 2022 07:17 AM GMT
Report

காயம் காரணமாக தீபக் சாஹர் ஐ.பி.எல். போட்டியில் பாதிக்கு மேற்பட்ட ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரின் கிரிக்கெட் போட்டிகள் வருகிற 26-ந் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடரின் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை ரூ.14 கோடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில், இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது சிஎஸ்கே வீரர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் தீபக் சாஹர்? - அதிர்ச்சியில் அணி நிர்வாகம் | Deepak Chahar To Step Down From Ipl Due To Injury

கடந்த மாதம் 20-ந்தேதி கொல்கத்தாவில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியின் போது அவருக்கு வலது கால் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு தசைநார் கிழிந்து இருப்பது தெரியவந்தது.

இந்த காயம் குணமடைய குறைந்தது 8 வார காலம் ஆகும் என்பதால் அவர் ஐ.பி.எல். போட்டியில் பாதிக்கு மேற்பட்ட ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இலங்கை தொடரிலிருந்து விலகிய தீபக் சாஹர் , பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி காயத்திலிருந்து மீண்டு வரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய சிஎஸ்கே அணி பெரும் சிக்கலில் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்களும் சோகத்தில் இருக்கின்றனர்.