விளையாடியது எல்லாமே தோனிக்காக மட்டும் தான் - நெகிழ்ந்த சென்னை அணி வீரர்
கேப்டன் தோனிக்காகவே மட்டுமே சிறப்பாக விளையாடினோம் என சென்னை அணி வீரர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 2021 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதே அணி தான் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறியது. அதன் பின்னர் தற்போது மீண்டும் வந்த சென்னை அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனால் அந்த அணிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் இந்த தொடர் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் நிறையை ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருக்கலாம். இந்த சீசனை நாங்கள் சிறப்பானதாக நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. என்னுடைய நான்காவது ஐபிஎல் பைனலில் நான் பட்டத்தை வென்ற அணியின் பக்கம் நிற்பதில் மன நிறைவு. மைதானத்தில் பனி படர்ந்திருந்தது. இருந்தாலும் அந்த அழுத்தத்தை நாங்கள் நன்றாகவே கையாண்டிருந்தோம். அதற்கு நாங்கள் கற்ற அனுபவமே காரணம்.
மேலும் கடந்த சீசன் எங்களுக்கு மோசமான சீசனாக அமைந்திருந்தாலும் இந்த சீசனில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தோம். நாங்கள் எல்லோரும் எங்கள் அணியின் கேப்டன் தோனிக்காக விளையாடினோம். அவருக்காக கோப்பையை கைப்பற்றி கொடுக்க வேண்டும் என்றும் அனைவரும் உற்சாகத்துடன் செயல்பட்டோம் என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
