சிஎஸ்கே அணிக்கு திரும்பும் தீபக் சஹர் - வெளியான ஹாப்பி நியூஸ், உற்சாகத்தில் ரசிகர்கள்!

deepakchahar cskteam deepakchaharinjury deepakreturnstoipl
By Swetha Subash Mar 09, 2022 08:41 AM GMT
Report

வருகிற மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ள நடப்பாண்டு ஐபிஎல் 15-வது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அதன்படி மார்ச் 26-ம் தேதி தொடங்கும் இந்த தொடர் மே 29-ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணிக்கு திரும்பும் தீபக் சஹர் - வெளியான ஹாப்பி நியூஸ், உற்சாகத்தில் ரசிகர்கள்! | Deepak Chahar Returns To Csk Team After Injury

மும்பை வான்கடே மைதானத்தில் மாலை தொடங்கவுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை முதல் அணியாக சிஎஸ்கே அணி சூரத் நகரில் உள்ள லால்பாய் காண்ட்ராக்டர் மைதனாத்தில் தொடங்கியுள்ளது.

கேப்டன் தோனி உள்ளிட்ட பல அணி வீரர்கள் சூரத் சென்றடைந்த நிலையில் அங்கு அவர்களுக்காக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிஎஸ்கே அணிக்கு திரும்பும் தீபக் சஹர் - வெளியான ஹாப்பி நியூஸ், உற்சாகத்தில் ரசிகர்கள்! | Deepak Chahar Returns To Csk Team After Injury

ஆனால் தீபக் சாஹருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த சீசனுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் காட்டு தீயாக பரவ,

தற்போது அனைத்து சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் இருக்கும் ஒரே கேள்வி தீபக் சாஹர் இந்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பது தான்.

இந்நிலையில், தீபக் சாஹருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் மீண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் அவர், தற்போது ஓய்வில் உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் அணியில் விளையாட முடியாது என்ற சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தயார் செய்யும் பணியில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கியது.

சிஎஸ்கே அணிக்கு திரும்பும் தீபக் சஹர் - வெளியான ஹாப்பி நியூஸ், உற்சாகத்தில் ரசிகர்கள்! | Deepak Chahar Returns To Csk Team After Injury

இந்த நிலையில் தான் ஏப்ரல் பாதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தீபக் சாஹர் திரும்பிவிடுவார் என்றும்

ஏப்ரல் 12-ம் தேதி பெங்களூருவுக்கு எதிரான போட்டி அல்லது ஏப்ரல் 17-ல் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த செய்தியால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.