“காதலே... காதலே..தனிப்பெருந்துணையே” - கிரிக்கெட் விளையாட சென்ற இடத்தில் காதலில் ஜெயித்த தீபக் சாஹர்

PBKSvCSK deepakchahar
By Petchi Avudaiappan Oct 07, 2021 04:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியின்போது காதலிக்கு மோதிரம் அணிவித்து சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர்  தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நடப்பு ஐபிஎல் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதனிடையே போட்டி முடிந்தது சென்னை அணி வீரர் தீபக் சாஹர் பார்வையாளர் மாடத்தில் நின்றுக் கொண்டிருந்த தனது தோழியிடம் காதலை தெரிவித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத காதலி சாஹரை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாகத் காதலிக்கு அவர் மோதிரம் அணிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஹோட்டல் அறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை அணி வீரர்கள் புடைசூழ தீபக் சாஹரும், அவரது காதலியும் கேக் வெட்டி கொண்டாடினர். இதன் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாக ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.