ஒருநாள் தொடரில் விலகுகிறாரா தீபக் சாஹர்? ரசிகர்கள் ஏமாற்றம்!
ஒருநாள் தொடரில் இருந்து பந்து வீச்சாளார் தீபக் சஹார் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபக் சஹார்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியில், மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பந்து வீசிய இந்தியாவுக்கு 40 ஓவர்களில் 250 ரன்கள் இலக்கினை தென் ஆப்ரிக்க அணி நிர்ணயித்தது.
அதன் பின்னர் பேட்டிங் செய்த ஷிகர் தவானின் தலைமையிலான இந்திய அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் தீபக் சஹார் விளையாடவில்லை. கணுக்காலில் ஏற்பட்ட விலகலால் பாதிக்கப்பட்டுள்ள தீபக் சஹார், முதல் போட்டியில் விளையாடவில்லை.
விலகல்?
ஆனால் இப்போது இந்த காயத்தின் தன்மை தீவிரமடைந்து வருவதால், தென் ஆப்ரிக்கா உடனான மீதமுள்ள ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வெடுப்பது நல்லது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே, டி20 உலகக் கோப்பை ஸ்டாண்ட்-பை பட்டியலில் தீபக் இருப்பதால், இனிவரும் ஒருநாள் போட்டிகளில் தீபக் சஹார் விளையாடமல் இருப்பது தான் நல்லது என அணி நிர்வாகம் கருதுவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி,
டி20 உலகக் கோப்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் ஆஸ்திரேலியாவுக்கு தீபக் சஹார் சென்று அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.