தீபக் சாஹருக்கு பதில் சென்னை அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ள வீரர்கள் இவர்கள் தான்
காயம் காரணமாக சென்னை அணியில் தீபக் சாஹர் இடம் பெற முடியாமல் போனால் அவருக்கு பதில் யார் அணிக்குள் வருவார்கள் என்பதை கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரின் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி மாதம் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சென்னை அணி, ஏற்கனவே தங்கள் அணியில் விளையாடி வந்த தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடிய தீபக் சாஹர் காயம் அடைந்ததால் அதனைத் தொடர்ந்து நடந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை. இதனிடையே ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களிலும் அவர் இடம் பெற மாட்டார் என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதிலாக அணியில் இடம் பெற 5 வீரர்களுக்கு வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அந்த வகையில் இஷாந்த் சர்மா, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் லயன்ஸ் போன்ற அணிகளில் விளையாடிய தவால் குல்கர்னி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அர்சான், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற சந்திப் வாரியர், த 19 வயதிற்குட்பட்ட உலக கோப்பை தொடரில் மிக சிறப்பாக ஆடிய ஆகாஷ் சிங் ஆகிய 5 பேரும் தான் இந்த பட்டியலில் உள்ளனர்.