நான் சிறப்பாக உருவாக தோனி தான் காரணம்... தீபக் சாஹர் புகழாரம்...
20 ஓவர் கிரிக்கெட்டில் ஸ்பெஷலிஸ்ட் பவுலராக தான் உருவாக தோனி தான் காரணம் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 7 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இதனிடையே தனது வளர்ச்சியில் தோனியில் பங்களிப்பு குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி தோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்பது தனது பெருங்கனவு என்றும், எனது ஆட்டம் அடுத்த படிக்கு முன்னேற அவரது வழிகாட்டுதல் பெரிதும் உதவியதாகவும் கூறியுள்ளார். மேலும் என்னை எப்போதுமே சப்போர்ட் செய்வதிலும், பொறுப்புகளை எப்படி சுமப்பது என்பதை சொல்லிக் கொடுத்தவரும் அவர்தான் என தீபக் சாஹர் புகழ்ந்துள்ளார்.
சென்னை அணியில் என்னைத் தவிர யாருமே பவர் ப்ளேயில் மூன்று ஓவர்கள் வீசியதில்லை.ரன்கள் விட்டுக் கொடுப்பதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதில் நான் தேர்ச்சி பெற்று வருகிறேன் எனவும் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil