இலங்கை தொடரில் இருந்து இரண்டு முக்கிய இந்திய அணி வீரர்கள் விலகல் - ரசிகர்கள் சோகம்
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து இரண்டு முக்கிய இந்திய அணி வீரர்கள் விலகியுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடர் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்திய அணி வீரர்கள் தீபக் சாஹர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஏற்கனவே விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு நிலையில் இந்த 2 முக்கிய வீரர்கள் விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு பதிலாக யார் களமிறக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.