மனைவி தீபாவுடன் கருத்து மோதல் உள்ளது - ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மாதவன் பதிவு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை கடந்த 18ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் -
சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.
அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை. 2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா இட்லி, தயிர்சாதம், வெண்பொங்கல், ஓட்ஸ், தக்காளி சாதம், சீத்தாப்பழம், திராட்சை உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டதாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனைவி தீபாவுடனான கருத்து மோதல்
இந்நிலையில், மனைவி தீபாவுடனான கருத்து மோதலை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மாதவன் பதிவு செய்துள்ளதாகவும், தன் மனைவியுடனான கருத்து மோதலை ஆணையம் தீர்த்து வைக்கவும் கோரிக்கை வைத்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.