சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை என முன்னாள் இந்திய வீரரான தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
16 அணிகள் பங்குபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதனால் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் டி20 உலகக்கோப்பை குறித்த தங்களது கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் இந்திய அணி வீரர் தீப்தாஸ் குப்தா டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் , யுஸ்வேந்திர சாஹல் கூட்டணி சேர்ந்து விளையாட வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
குல்தீப் யாதவ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியில் ஆடவில்லை என்பதால் அவர் ஆடுவதற்கான வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒருசில மாதங்கள் இருப்பதால், அதற்கிடையே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.