குறையும் கொரோனா பாதிப்பு .. அதிகரிக்கும் உயிரிழப்பு
தமிழக சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையின் படிகடந்த 24 மணிநேரத்தில் 25,317 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆகவே தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,48,346 பேர் ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 2,217 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 483 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 32,263 பேர் குணமடைந்துள்ளதாகவும் , தமிழகத்தில் இதுவரையிலும் 18,34,439 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது, அதே சமயம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.