பிரபல பல்கலைக்கழகத்தில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு - போலீசார் தீவிர விசாரணை!

Delhi
By Swetha Subash Jun 04, 2022 08:33 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தின் வனப்பகுதியில் மரத்தில் தொங்கியப்படி அழுகிய நிலையில் சடலம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்ற மாணவர்கள் மரத்தில் சடலம் ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிரபல பல்கலைக்கழகத்தில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு - போலீசார் தீவிர விசாரணை! | Decomposed Man Body Foung In Jnu Campus

இது குறித்து போலீசாருக்கு அந்த மாணவர்கள் தகவல் கொடுத்ததையடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார் என அடையாளம் காண்பதற்காக தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர்.

பிரபல பல்கலைக்கழகத்தில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு - போலீசார் தீவிர விசாரணை! | Decomposed Man Body Foung In Jnu Campus

அந்த நபர் இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் எனவும் அவர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து யாராவது அவரை கொலை செய்து தூங்கில் தொங்கவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.