ஏமன் மீது தாக்குதல்.. அமெரிக்க பாதுகாப்புத்துறையின் திட்டம் - லிக்கான மெசேஜ்!
ஏமன் மீது தாக்குதல் நடத்துவது பற்றி அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் தாக்குதல்
அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிக்னல்(Signal) செயலியை பயன்ப்படுத்தி வருகின்றனர். இது மிகவும் பாதுகாப்பாக மெசேஜிங் ஆப்பாக கருத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த செயலியை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 11ம் தேதி சிக்னல் ஆப்-ல் குரூப் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த குரூப்புக்கு 'Houthi PC small group' என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் தவறுதலாக The Atlantic இதழின் ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பெர்க்-ஐ இந்த குரூப்பில் இணைத்திருக்கிறார்.
லிக்கான மெசேஜ்!
இக்குழுவில் ஏற்கெனவே, அமெரிக்க துணை அதிபர் JD வான்ஸ், பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், தேசிய புலனாய்வு இயக்குநர் துல்ஸி காபார்ட், CIA இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் போன்ற முக்கிய அதிகாரிகள் இருந்துள்ளனர்.
அப்போது மார்ச் 13ம் தேதி ஏமன் மீது 72 மணி நேரத்தில் நடத்தப்பட வேண்டிய தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நேற்று இந்த சாட்கள் தொடர்பான அனைத்து ஸ்கிரீன்ஷாட்களும் The Atlantic இதழில் வெளியாகியிருக்கிறது. இதனால் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர்.