கொரோனாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கடிதம்
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
நேற்று இது வரை இல்லாத அளவிற்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளது.
இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கொரோனா சூழலை கட்டுப்படுத்த செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் கொரோவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் பேரிடர் மீட்பு பணிகளுக்காக உள்ள நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவிட வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.