இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - அதிபர் அறிவிப்பு..!

Srilanka Emergency Announced GotabayaRajapaksa EconomicCrisis Declaration
By Thahir Apr 01, 2022 07:13 PM GMT
Report

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

நாளுக்கு நாள் எரிப்பொருட்களின் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

அந்நாட்டில் தினமும் 13 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில்,சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன் ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் திரண்டனர்.

அப்போது அவர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே.