ஆண்டுதோறும் 2 முறை CUET தேர்வு - மத்திய அரசு முடிவு
மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் 2 முறை நடத்த முடிவு செய்துள்ளது.
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதோடு இந்த திட்டம் 2022-23 கல்வியாண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள்கூட இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்தியஅரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் மத்திய பல்கலைகழகம் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வர உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இரு தேர்வையும் 45 நாட்கள் இடைவெளியில் எழுதலாம்.
இதனால் மாணவர்கள் இரண்டாவது வாய்ப்பில் தங்கள் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.