அது விபத்து இல்லை தாக்குதல்தான் ..அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பாகிஸ்தான்!

china pakistan murdered 9chinise
By Irumporai Jul 25, 2021 12:42 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தானில், சீன பொறியார்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் என பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் Pakhtunkhwa மாகாணத்தில்அணைக்கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் ஈடுபட்டு வரும் சீன பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு கடந்த 14ம் தேதி பேருந்து சென்றபோது, திடீரென குண்டு வெடித்து பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அது விபத்து இல்லை  தாக்குதல்தான் ..அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பாகிஸ்தான்! | Deaths Of Chinese Nationals Pakistan Talks

இந்த விபத்தில் 9 சீன பொறியாளர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என சீன அரசு கூறி வந்தது.

இது குறித்து கூடுதல் தகவல் அறிய 15 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை விசாரணைக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், தொழில் நுட்ப கோளாறு காரணமாக நடந்த விபத்து எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவந்தது.

இந்த நிலையில் சீன சென்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி, இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின் அது பயங்கரவாத தாக்குதல் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.