ஜல்லிக்கட்டு போட்டியினை காணவந்த பார்வையாளர் பலி : சோகத்தில் குடும்பத்தினர்

Jallikattu
By Irumporai Jan 16, 2023 11:08 AM GMT
Report

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3-வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

ஜல்லிக்கட்டு போட்டி

இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதேபோல் திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியினை காணவந்த பார்வையாளர் பலி : சோகத்தில் குடும்பத்தினர் | Death Trichy Jallikattu

பார்வையாளர் பலி

அப்போது போட்டியை காண வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் (25) என்பவர் காளை முட்டியதில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அரவிந்த் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் அரவிந்த் ராஜன் என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.