துருக்கி - சிரியாவில் கோரத்தாண்டவம் ஆடிய பூகம்பம் - உயிரிழப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்தது..!

Turkey Syria Death Turkey Earthquake
By Thahir Feb 18, 2023 03:21 AM GMT
Report

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்துள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த 6 ம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கங்கள் 7.7 மற்றும் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

death-toll-rises-above-43000-in-turkey-earthquake

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

உயிரிழப்பு 43 ஆயிரத்தை கடந்தது

இதில் ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 12வது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கியில் 39, 672 பேர் உயிரிழந்தனர். மேலும் சிரியாவில் 3,688 பேர் உயிரிழந்துள்ளனர்.