அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Chennai
By Fathima
அமோனியா வாயு கசிந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரின் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் தனியார் மீன் ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது.
இதில் பணியில் இருந்து 64 நபர்கள் பாதிக்கப்பட்டனர், இவர்களில் 60 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் ஆவர்.
உடனடியாக அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார், இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan