சிறையில் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து உள்ளது - அரசு மீது குற்றம்சாட்டும் ஆம் ஆத்மீ
சிறையில் ஆம் ஆத்மீ டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திகார் சிறையில் உயிருக்கு பாதிப்புள்ளதாக ஆம் ஆத்மீ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சிறையில் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மீ கட்சியின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி சிறையில் உள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கபெற்றபோதிலும், CBI விசாரணை இருப்பதால், அவர் இன்னும் சிறையிலேயே உள்ளார்.
ஆம் ஆத்மீ கட்சி தரப்பில் ஜாமீன் பெற பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் தான், டெல்லி அமைச்சரான அதிஷி அவருக்கு கொலை சதி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
உயிருக்கு ஆபத்து
அவர் பேசும் போது, பாஜக தலைமையிலான மாநில அரசுகள் கெஜ்ரிவால் செய்து வரும் நலப்பணிகளுக்கு ஈடுகொடுக்க முடியாததால், அவரை பொய் வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் அடைத்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், இது அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைப்பதற்கான சதி மட்டுமல்ல என்றும் அவரது உடல்நிலையைக் குறிவைக்கும் சதி...அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்லும் சதி ...", என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.