80 ஆயிரம் பேர் முன்னாடி.. 13 வயது சிறுவன் கையால் மரண தண்டனை?
சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த நபரை சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மரண தண்டனை
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை கொலைசெய்த குற்றவாளிக்கு ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு தாலிபான் ஆட்சியாளர்களும் அனுமதி அளித்தனர்.இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு இந்த மரண தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
பழிக்குப் பழி
அப்போது அங்கு கூடியிருந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது மத முழக்கங்களை எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுசார்ந்த வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை பதைக்க வைக்கின்றன. தொடர்ந்து இதற்கு உலகளவில் கடும் கண்டங்கள் எழுத் தொடங்கியுள்ளன.
இது மனிதாபிமானமற்ற, கொடூரமான செயல் என்றும் சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனவும் ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா சிறப்பு தொடர்பாளர் ரிச்சர்ட் பென்னட் கண்டனம் தெரிவித்துள்ளார்.