உ.பி.யில் பரபரப்பு - அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் தற்கொலை! பிரதமர் மோடி இரங்கல்

death-samugam-viral-news
By Nandhini Sep 21, 2021 05:39 AM GMT
Report

உத்தரப் பிரதேசத்தில் இந்து சமய மாடாதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பார்தியா அகாரா பரிஷித் (ஏபிஏபி) மடத்தின் தலைவர் நரேந்திர கிரி தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், காவல்துறையினர் இது குறித்து முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கடிதங்களில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கள் தெரிவித்துள்ளனர்.