21 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை - பள்ளி வார்டனுக்கு தூக்குத் தண்டனை
பாலியல் வன்கொடுமை செய்த விடுதி வார்டனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
அருணாச்சலப் பிரதேசம், சியோமி மாவட்டத்தில் அரசு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை வார்டனாக இருந்த யும்கேன் பக்ரா,
ஹிந்தி ஆசிரியர் மார்பும் கோம்திர், மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் ஆகியோர் 15 மாணவிகள் மற்றும் 6 மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து புகாரளித்துக் பள்ளித் தலைமை ஆசிரியர் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். இந்நிலையில், 2022ல் தனது 12 வயது இரட்டைக் குழந்தைகளை விடுதியில் பெற்றோர் சேர்த்த நிலையில், தனது குழந்தைகளை வார்டன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மரண தண்டனை
இதனையடுத்த விசாரணையில் மாணவிகளுக்கு போதை மருந்து கலந்துகொடுத்து அவர்களை வார்டன் வன்கொடுமை செய்துள்ளார். மாணவிகள் வெளியில் சொல்லாமல் இருக்க அடித்து துன்புறுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 6 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றத்தை மறைத்ததற்காக பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் வார்டன் உள்பட 3 பேரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து, வார்டனுக்கு தூக்குத் தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் ஹிந்தி ஆசிரியருக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.