FlyDubai துணை விமானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு

Oman
By Fathima Oct 05, 2026 09:07 AM GMT
Report

FlyDubai விமானத்தின் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி தான் சாகப் பயப்படவில்லை என்றும் விமானத்தை மோதி அழிப்பதே தனது நோக்கமாக இருந்தது எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட FlyDubai விமானத்தின் துணை விமானி ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரிடம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

FlyDubai துணை விமானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு | Death Penalty For Flydubai Co Pilot

இந்நிலையில் தனக்கு மரணம் குறித்த அச்சம் ஏதுமில்லை என்றும், விமானத்தை தகர்ப்பதே தனது நோக்கமாக இருந்தது எனவும் சவுதி போலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அவருக்கு மரணதண்டனை விதிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.